சமுதாயத்தில் வளர்ந்துள்ள கயவர்களின் செல்வாக்கினையும், போலி அரசியல்வாதிகளின் வெறுக்கத்தக்க முன்னேற்றத்தை ஒழிக்க வேண்டும்- மு.வரதராசனார் !

Monday, February 27, 2012

புதுக்கோட்டை வரலாறு



புதுக்கோட்டை

புதுக்கோட்டை வரலாறு

வரலாறு

தற்போதைய புதுக்கோட்டை பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. நூறாண்டுகளுக்கு முன் இந்த மாவட்டம் சோழ, பல்லவ, ஹொய்சாள மன்னர்களால் ஆளப்பட்டது. 14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் கீழ் இருந்த போது விஜய நகர மன்னர்கள் முஸ்லிம் மன்னர்களுடன் பல போர்களை புரிந்துள்ளனர். 1565ம் ஆண்டு தளிகோட்டாவில் நடந்த போரில் விஜயநகர மன்னர் தோற்றதால் பேரரசு நலிவடைந்தது. விஜயநகர பேரரசின் மாகாண பொறுப்பாளர்களாக இருந்த நாயக்கர்கள் இப்பகுதியை ஆண்டனர். 16 முதல் 17ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் நாயக்கர்கள் புதுக்கோட்டையை ஆண்டுள்ளனர்.

தொண்டைமான் பரம்பரை

புதுக்கோட்டை என்ற பகுதியை ஏற்படுத்தியவர் ரகுநாதராய தொண்டைமான் ஆவார். இவர் திருமயம் என்ற பகுதியின் பொறுப்பாளராக இருந்து வந்தார். இவர் ராமநாதபுர மகாராஜா ரகுநாத கிழவன் சேதுபதியின் மைத்துனர் ஆவார். தொண்டைமானின் சிறப்பான செயல்கள் காரணமாக சேதுபதி புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை அளித்தார். பின்னர் இந்த பகுதியை தொண்டைமான் மன்னர்கள் ராமநாதபுர அரசை சார்ந்தே இருந்து வந்தனர். 1763ம் ஆண்டு புதுக்கோட்டை ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் வந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் 1948ம் ஆண்டு வரை தொண்டைமான் மன்னர்கள் புதுக்கோட்டையை ஆண்டு வந்தனர். இந்த மாவட்டம் திருச்சியின் ஒரு பகுதியாகவே செயல்பட்டு வந்தது. 1974ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி புதுக்கோட்டை திருச்சி, தஞ்சையிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment