சமுதாயத்தில் வளர்ந்துள்ள கயவர்களின் செல்வாக்கினையும், போலி அரசியல்வாதிகளின் வெறுக்கத்தக்க முன்னேற்றத்தை ஒழிக்க வேண்டும்- மு.வரதராசனார் !

Saturday, December 03, 2011

நிகண்டு


நிகண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நிகண்டு என்பது சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல் வகையாகும். தமிழில் அகராதிகளுக்கு முன்னோடியாக இருந்தவை நிகண்டுகள். இந் நூல்கள் ஆரம்பத்தில் உரிச்சொற்பனுவல் என்ற தமிழ்ச் சொல்லால் அழைக்கப்பட்டன. எனினும் இச் சொல் நீளமாக இருந்ததனாலோ அல்லது இடைக் காலத்திலேற்பட்ட வடமொழிச் சொற்பயன்பாட்டு மோகம் காரணமாகவோ நிகண்டு என்ற வடமொழிப் பெயரே பிற்காலத்தில் நிலைபெற்று விட்டது. நிகண்டு என்னும் சொல் தொகை, தொகுப்பு, கூட்டம் என்னும் பொருள் தரும்.
நிகண்டு என்னும் நூல்வகைக்கு முன்னோடி போல் அமைந்தது தொல்காப்பியம். தொல்காப்பியர் அருஞ்சொற்களுக்கு மட்டும் பொருள்கூறிச் செல்கிறார். ஒரு சில எடுத்துக்காட்டுகள்:
  • உரியியலில் அருஞ்சொற்களாகத் தோன்றியவற்றுக்குப் பொருள் தருகிறார். "வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா, வெளிப்பட வாரா உரிச்சொல் மேன" ("பொருள் வெளிப்படையாகத் தெரிகின்ற சொற்களை விட்டுவிட்டு, பொருள் தெளிவற்ற அரிய சொற்களுக்கு மட்டும் பொருள் கூறுவோம்") என்று குறிப்பிடுகிறார்.
  • மரபியலில் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற்பெயர் முதலியவற்றை நிகண்டுகள் போல் தொகுத்துக் கூறி, அவை தமிழ் மரபுப்படி வழங்கும் வழக்கையும் குறிப்பிடுகிறார்.
நிகண்டுகள் செய்யுள் வடிவில் அமைந்தவை. அவற்றில் ஒருபொருட் பல்பெயர், ஒருசொற் பல்பொருள், தொகைப்பெயர் என்னும் மூன்று பெரும் பிரிவுகள் உண்டு. அவை பெரும்பாலும் நூற்பாவினால் அமைந்தவை. வெண்பா, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலித்துறை போன்ற பிற பாவகைகளினால் அமைந்த நிகண்டுகளும் உள்ளன.

 

காலம்
நூல்
ஆசிரியர்
கி.பி. 08ஆம் நூற்றாண்டு
திவாகரர்
கி.பி. 09ஆம் நூற்றாண்டு
பிங்கலம்(பிங்கலந்தை)
பிங்கலர்
கி.பி. 11ஆம் நூற்றாண்டு
உரிச்சொல் நிகண்டு
காங்கேயர்
கி.பி 15ஆம் நூற்றாண்டு
கயாதரம்
கயாதரர்
கி.பி 15ஆம் நூற்றாண்டு
பாரதி தீபம்
திருவேங்கடபாரதி
கி.பி 16ஆம் நூற்றாண்டு
சூடாமணி நிகண்டு
மண்டலபுருடர்
1594
அகராதி நிகண்டு(சூத்திரவகராதி)
இரேவணசித்தர்
கி.பி. 16ஆம் நூற்றாண்டு
கைலாச நிகண்டு சூளாமணி
கைலாசம்
கி.பி. 17ஆம் நூற்றாண்டு
ஆசிரிய நிகண்டு
ஆண்டிப்புலவர்
1700
பல்பொருட் சூடாமணி(வடமலை நிகண்டு)
ஈசுர பாரதியார்
1732
சதுரகராதி
வீரமாமுனிவர்
1769
அரும்பொருள் விளக்க நிகண்டு
அருமருந்தைய தேசிகர்
கி.பி. 18ஆம் நூற்றாண்டு
உசிதசூடாமணி
சிதம்பரக் கவிராயர்
கி.பி. 18ஆம் நூற்றாண்டு
பொதிகை நிகண்டு
சாமிநாத கவிராயர்
கி.பி. 19ஆம் நூற்றாண்டு
நாமதீப நிகண்டு
சிவசுப்பிரமணியக் கவிராயர்
கி.பி. 19ஆம் நூற்றாண்டு
பொருட்டொகை நிகண்டு
சுப்பிரமணிய பாரதி
1850
நாநார்த்த தீபிகை
முத்துசாமிப் பிள்ளை
1844
கந்தசுவாமியம் தொகைப் பெயர் விளக்கம் இலக்கத் திறவுகோல் அகராதி மோனைக் ககராதி யெதுகை
சுப்பிரமணிய தீட்சிதர் வேதகிரி முதலியார்
1874
சிந்தாமணி நிகண்டு
வைத்தியலிங்கம் பிள்ளை
1878
அபிதானத் தனிச்செய்யுள் நிகண்டு
கோபாலசாமி நாயக்கர்
கி.பி 19ஆம் நூற்றாண்டு
விரிவு நிகண்டு
அருணாசல நாவலர்
கி.பி. 20ஆம் நூற்றாண்டு
நவமணிக்காரிகை நிகண்டு
அரசஞ் சண்முகனார்
கி.பி. 20ஆம் நூற்றாண்டு
தமிழுரிச்சொற் பனுவல்
கவிராச பண்டிதர் இராம சுப்பிரமணிய நாவலர்




No comments:

Post a Comment